புகைப்படங்களில் இருந்து ஸ்டிக்கர் உருவாக்கும் புதிய அம்சம் - வாட்ஸ் அப் அறிமுகம்

புகைப்படங்களில் இருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் வெளியிட உள்ளது. தற்போதைய நிலையில், ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு, சோதனை அடிப்படையில், இந்த அம்சம் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 23.10.7.4 வெர்ஷனில் இந்த புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. 'நியூ ஸ்டிக்கர்' என்ற இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த ஸ்கிரீன் ஷாட் கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 'சாட் ஷேர் ஆக்சன்' என்ற பிரிவின் கீழ், நியூ ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. […]

புகைப்படங்களில் இருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் வெளியிட உள்ளது. தற்போதைய நிலையில், ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு, சோதனை அடிப்படையில், இந்த அம்சம் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 23.10.7.4 வெர்ஷனில் இந்த புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. 'நியூ ஸ்டிக்கர்' என்ற இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த ஸ்கிரீன் ஷாட் கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 'சாட் ஷேர் ஆக்சன்' என்ற பிரிவின் கீழ், நியூ ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லைப்ரரியில் உள்ள புகைப்படங்களை பயனர்கள் எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது.

புகைப்படத்தில் உள்ள பிரதான பகுதியை கண்டறிந்து எடுப்பதற்கு ஐஓஎஸ் 16 ஏ பி ஐ பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு இதற்கான புதிய அம்சம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அதை வேளையில், ஆண்ட்ராய்டு கைபேசிகளுக்கான இந்த புதிய அம்சம் வெளியீடு குறித்து விரிவான விளக்கங்கள் கூறப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu