கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் கிட்டத்தட்ட 2 கோடி இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2 மடங்கு அதிகமாகும்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 22310000 எண்ணிக்கையிலான இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஜனவரியில் 67 லட்சம், பிப்ரவரியில் 76 லட்சம் மற்றும் மார்ச்சில் 79 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு மாறாக, ஸ்பேம் மற்றும் ஸ்கேம் போன்றவற்றின் அடிப்படையில் இயங்கி வரும் வாட்ஸ் அப் கணக்குகளை நிறுவனம் நீக்கி வருகிறது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் பாதுகாப்பை இது உறுதி செய்வதாக கூறப்படுகிறது.