நேற்று இரவு உலகம் முழுவதும் வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் திடீரென முடங்கின.
உலகம் முழுவதும் நேற்று இரவு வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிப் போயின. இந்த இரண்டு தளங்களும் நேற்று இரவு 11.45 மணியான அளவில் முடங்கியது. அப்போது லட்சக்கணக்கான பயனர்கள் பாதிப்படைந்தனர். செயலில் நுழைய முன்னேற்றபோது தற்போது சேவை கிடையாது என்று காட்டியது. இதனையடுத்து வாட்ஸ் அப் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் புகார் அளித்தனர். பிரேசிலில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்களும், இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்களும், இங்கிலாந்தில் 46 ஆயிரம் பயனர்களும் புகார் அளித்துள்ளனர். அதோடு இன்ஸ்டாகிராம் முடங்கியதில் அமெரிக்காவில் 4,800 பேர் புகார் அளித்தனர். பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பின.
இந்த செயலிகள் இவ்வாறு முடங்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் செயல் இழந்தது குறிப்பிடத்தக்கது.














