நீண்ட நேர செயலிழப்புக்குப் பிறகு வாட்ஸ்அப் மீண்டும் செயல்பட்டது - மன்னிப்பு கோரியது மெட்டா

October 25, 2022

மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சுமார் இரண்டு மணிநேரம் செயல்படவில்லை. மறுசீரமைப்புக்குப் பிறகு பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இருப்பினும் தற்போது வாட்ஸப் நிலையானதாக இல்லை என்று பயனர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகள் படிப்படியாக நீங்கின. 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தகவல் தொடர்பு மற்றும் பணம் செலுத்துவதற்காக வாட்ஸப் -ஐ நம்பியுள்ளனர். இந்நிலையில் வாட்ஸ் அப் சிலமணி நேரம் செயலிழந்தது பயணர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ட்விட்டர் மற்றும் பிற தளங்களில் #WhatsAppDown […]

மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சுமார் இரண்டு மணிநேரம் செயல்படவில்லை. மறுசீரமைப்புக்குப் பிறகு பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இருப்பினும் தற்போது வாட்ஸப் நிலையானதாக இல்லை என்று பயனர்கள் தெரிவித்துள்ளனர். குறைபாடுகள் படிப்படியாக நீங்கின. 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தகவல் தொடர்பு மற்றும் பணம் செலுத்துவதற்காக வாட்ஸப் -ஐ நம்பியுள்ளனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப் சிலமணி நேரம் செயலிழந்தது பயணர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ட்விட்டர் மற்றும் பிற தளங்களில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் வலம்வரத் தொடங்கியது. பல பயனர்கள் தங்கள் இணைய சேவை பிரச்சனை என்று முதலில் நினைத்ததாக தகவல் வெளியானது.

இது குறித்து விளக்கமளித்த வாட்ஸப் உரிமையாளரான மெட்டாவின் செய்தி தொடர்பாளர், திடீரென ஏற்பட்ட சிக்கலால் வாட்ஸப் செயல்படவில்லை என்றும் தற்போது நிறுவனம் சிக்கலை கண்டறிந்து சரிசெய்து விட்டதாகவும் ௯றினார். மேலும் இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மெட்டா பயனர்களிடம் மன்னிப்பு கோ௫வதாவும் தெரிவித்தார். ஆனால் அவர் வாட்ஸப் செயலிழப்புக்கான சரியான காரணத்தைக் ௯றவில்லை.

அதாவது ஆன்லைன் கருவியான டவுன் டிடெக்டர் மதியம் 12.07 மணிக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக "சிக்கல் அறிக்கைகளை" பெற்றது. மேலும் மதியம் 1 மணிக்குள், செய்திகள் செல்லவில்லை என்று 70 சதவீத அறிக்கைகளையும் சேவையகத் துண்டிப்பு மற்றும் பயன்பாடு செயலிழந்ததாக 30% அறிக்கைகளையும் பெற்றது. அதேபோல் 25,000க்கும் மேற்பட்ட அறிக்கைகளை பட்டியலிட்டது. பின்னர் சிக்கல் சரிசெய்யப்பட்டதில் பிற்பகல் 3 மணியளவில் புகார் அறிக்கைகள் சுமார் 1,000 ஆகக் குறைந்தது என்று கூறினார் . இந்தியா, இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் ட்விட்டர் மற்றும் மெட்டாவின் பிற தளங்களில் வாட்ஸ்அப் இணைப்பதில் சிக்கல் இருப்பதைப் பற்றி இடுகையிட்டனர்.
ஆனால் லண்டனில் உள்ள பயனர்களுக்கும் வாட்ஸப்பில் சிக்கல் ஏற்பட்டது என்று ஒ௫ செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu