பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த வகையில், புதிதாக, வாட்ஸ்அப் செயலியில் தீம்கள் கொண்டு வரப்பட உள்ளன.
வாட்ஸ்அப் மேம்படுத்தல் விவரங்களை வெளியிடும் WABetaInfo தளத்தில் புதிதாக தீம் அம்சம் கொண்டுவரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பச்சை, நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய வண்ணங்களில் புதிய தீம்கள் கொண்டுவரப்படுகின்றன. இது தவிர, ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் முக்கிய அம்சம் கொடுக்கப்பட உள்ளது. ஐஓஎஸ் 23.10.0.74 வெர்ஷனில், ஸ்டிக்கர்களை எடிட் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.














