வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் ‘ஆடியோ சாட்’ அம்சம் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆடியோ சாட் அம்சம் பொதுமக்கள் உரையாடும் போக்கையும் பாணியையும் மாற்றி அமைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த புதிய அம்சத்திற்காக, சாட் ஹெட்டரில், அலை வடிவ ஐகான் சேர்க்கப்படும். அதனை கிளிக் செய்து, ஆடியோ சேட்டை தொடங்கலாம். இது பயனர்களுக்கு நிகழ் நேர அனுபவத்தை தரும் என்று கூறப்படுகிறது. அத்துடன், உரையாடலை ரெக்கார்ட் செய்யும் வசதியும் கொடுக்கப்படுகிறது. இதனை விளக்கும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அம்சம் வெளிவருவதற்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.