வாட்ஸ் அப்பில் வெளிவந்துள்ள புதிய அம்சங்கள்

February 6, 2023

வாட்ஸ்அப் செயலியில் தற்போது பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, டைப் செய்யாமல், கூகுள் அசிஸ்டன்ட் அல்லது சிரி மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் தாங்களாக டைப் செய்வதற்கு பதில், செய்தியைச் சொன்னால், கூகுள் அசிஸ்டன்ட் அல்லது சிரி இந்த செய்தியை உரிய நபருக்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வாட்ஸ்அப் குரூப் இன் தலைப்பை நீளமாக வைத்துக் கொள்வதற்கான அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 512 அளவில் […]

வாட்ஸ்அப் செயலியில் தற்போது பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, டைப் செய்யாமல், கூகுள் அசிஸ்டன்ட் அல்லது சிரி மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் தாங்களாக டைப் செய்வதற்கு பதில், செய்தியைச் சொன்னால், கூகுள் அசிஸ்டன்ட் அல்லது சிரி இந்த செய்தியை உரிய நபருக்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வாட்ஸ்அப் குரூப் இன் தலைப்பை நீளமாக வைத்துக் கொள்வதற்கான அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 512 அளவில் இருந்த எழுத்துக்கள் எண்ணிக்கை, தற்போது 2048 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தலைப்புகளில் அதிக அளவிலான தகவல்களை வைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், அனுப்பிவிட்ட குறுஞ்செய்தி ஒன்றை 2 நாட்கள் கழித்து டெலிட் செய்வதற்கான வசதி வெளியிடப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த அம்சங்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu