வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள் வெளியீடு

வாட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, போல் எனப்படும் கருத்து கேட்பு அம்சத்தில் புதிய மேம்படுத்தல்கள் வெளிவந்துள்ளன. மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள் போலவே, டாக்குமென்ட்களை ஷேர் செய்யும் போது அதற்கான கேப்ஷன்களை எடிட் செய்யும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுவாக, கருத்து கேட்பு நடத்தப்படும் போது, பயனர் ஒருவர் பல்வேறு ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கும் அம்சம் இருக்கும். தற்போது, கருத்து கேட்பு நடத்துபவருக்கு, ஒற்றை பதில் மட்டுமே கிடைக்க வேண்டும் என்றால், அந்த வகையில் கருத்து கேட்பு […]

வாட்ஸ்அப் செயலியில் பல புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, போல் எனப்படும் கருத்து கேட்பு அம்சத்தில் புதிய மேம்படுத்தல்கள் வெளிவந்துள்ளன. மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள் போலவே, டாக்குமென்ட்களை ஷேர் செய்யும் போது அதற்கான கேப்ஷன்களை எடிட் செய்யும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுவாக, கருத்து கேட்பு நடத்தப்படும் போது, பயனர் ஒருவர் பல்வேறு ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கும் அம்சம் இருக்கும். தற்போது, கருத்து கேட்பு நடத்துபவருக்கு, ஒற்றை பதில் மட்டுமே கிடைக்க வேண்டும் என்றால், அந்த வகையில் கருத்து கேட்பு கேள்விகளை வடிவமைக்கும் முறை வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், கருத்து கேட்புகளை எளிமையாக தேடும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கருத்து கேட்பை பதிவிட்ட நபருக்கு எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து வசதிகளும், வரும் வாரங்களில், அனைத்து சர்வதேச பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu