வாட்ஸ் அப்பில் பல புதிய அம்சங்கள் வெளியீடு

February 17, 2023

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக பல்வேறு அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் எண்ணிக்கை 30 ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, ஆவணங்களை அனுப்பும்போது அதற்கான சில தகவல்களை கேப்ஷன் ஆக கொடுக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் புதிய வாட்ஸ் அப் மேம்படுத்தலை தரவிறக்கம் செய்தால் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் இந்த அம்சங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து, […]

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக பல்வேறு அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் எண்ணிக்கை 30 ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, ஆவணங்களை அனுப்பும்போது அதற்கான சில தகவல்களை கேப்ஷன் ஆக கொடுக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் புதிய வாட்ஸ் அப் மேம்படுத்தலை தரவிறக்கம் செய்தால் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் இந்த அம்சங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புடன் சேர்த்து, வாட்ஸ் அப் மற்றொரு புதிய அம்சத்திற்கான பரிசோதனையில் இறங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பொழுது, அதற்கான வரிவடிவத்தை தானாகவே அனுப்பும் முறையை (ட்ரான்ஸ்கிரிப்ட்) பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. பயனர்களுக்கான வசதியை மேம்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை, வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu