வாட்ஸ் அப்பில், தவறுதலாக டெலிட் செய்த தகவலை மீட்டெடுக்கும் புதிய அம்சம் அறிமுகம்

December 21, 2022

வாட்ஸ்அப் நிறுவனம், தவறுதலாக டெலிட் செய்த தகவலை மீட்டெடுக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது. ‘ஆக்சிடென்டல் டெலிட்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம், ஒரு தகவலை டெலிட் செய்யும் பட்சத்தில், அதனை 5 வினாடிகளுக்குள் மீட்டெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது, ‘டெலிட் ஃபார் எவ்ரிஒன்’ ஆப்ஷனுக்கு பதிலாக ‘டெலிட் ஃபார் மீ’ ஆப்ஷனை தவறுதலாக தேர்ந்தெடுத்து விட்டால், அதனை 5 வினாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம். முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு, டெலிட் பார் எவ்ரிஒன் […]

வாட்ஸ்அப் நிறுவனம், தவறுதலாக டெலிட் செய்த தகவலை மீட்டெடுக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறது. ‘ஆக்சிடென்டல் டெலிட்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம், ஒரு தகவலை டெலிட் செய்யும் பட்சத்தில், அதனை 5 வினாடிகளுக்குள் மீட்டெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது, ‘டெலிட் ஃபார் எவ்ரிஒன்’ ஆப்ஷனுக்கு பதிலாக ‘டெலிட் ஃபார் மீ’ ஆப்ஷனை தவறுதலாக தேர்ந்தெடுத்து விட்டால், அதனை 5 வினாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு, டெலிட் பார் எவ்ரிஒன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, 7 நிமிடங்களுக்குள் தகவலை டெலிட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 60 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வியூ ஒன்ஸ் அம்சமும் கொண்டுவரப்பட்டது. தற்போது, ஆக்சிடென்டல் டெலிட் அம்சம், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில், குரூப் சாட் மற்றும் தனிப்பட்ட சாட் இரண்டிலும் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu