பயனர் வசதிக்காக வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் சேனல் அம்சத்தில் புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் சேனல் என்பது ஒரு வழி ஒளிபரப்பு தளமாகும். இதில், வாய்ஸ் நோட் அனுப்புவது, கருத்துக்கணிப்பு வெளியிடுவது, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது, ஒன்றுக்கும் மேற்பட்ட அட்மின்களை வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால், வாட்ஸ் அப் சேனல் பயனர்களின் அனைத்துவித தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில், பரவலான மேம்படுத்தல் கொண்டுவரப் படுகிறது.