பொதுவாக வாட்ஸ்அப் தரவுகளை ஒரு கைபேசியில் இருந்து இன்னொரு கைப்பேசிக்கு மாற்ற கூகுள் டிரைவ் பேக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது, நேரடியாக ஒரு ஆண்ட்ராய்டு கைபேசியில் இருந்து மற்றொரு ஆண்ட்ராய்டு கைபேசிக்கு வாட்ஸ்அப் தரவுகளை மாற்றும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு, வாட்ஸ்அப் நிறுவனம், ‘மூவ் டு ஐஓஎஸ்’ என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்தது. இதன் மூலம், கூகுள் டிரைவ் இல்லாமல், நேரடியாக ஆண்ட்ராய்டு கைபேசியில் இருந்து ஐபோனுக்கு வாட்ஸ்அப் தரவுகளை மாற்ற முடிந்தது. தற்போது, இதே வசதியை, இரு ஆண்ட்ராய்டு கைபேசிகளுக்கிடையே கொண்டு வர வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் இந்த புதிய வசதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.