ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், மூன்றாம் தரப்பு சாட் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. அதன்படி, மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸ் அப்பில் ஒருங்கிணைந்து செயலாற்றும். எனவே, வாட்ஸ் அப் செயலி மூலமாகவே மற்றொரு சமூக செயலியை பயன்படுத்துபவருடன் உரையாட முடியும். இந்த அம்சம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் தரப்பு சாட் அம்சம் வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மேம்படுத்தல் குறித்த விவரங்களை வெளியிடும் WABetaInfo இந்த தகவலை தெரிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு சாட் பற்றிய ஸ்கிரீன் ஷாட் WABetaInfo தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனி போல்டரில் வேறு செயலிகளின் சாட்களை பார்க்க முடியும். இந்த அம்சத்தின் மூலம், வேறு எந்தெந்த சமூக தளங்கள் வாட்ஸ் அப் உடன் இணைக்கப்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.