பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு அம்சங்களை கொண்டு வருகிறது. முதன்மையாக, கைபேசி செயலியில் அனைத்து அம்சங்களும் கொண்டுவரப்படும். அதன் பிறகு, கணினி வெர்ஷனில் அம்சங்கள் விரிவாக்கம் செய்யப்படும். அந்த வகையில், வாட்ஸ் அப் வெப் என்ற கணினி பயன்பாட்டு செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன.
வாட்ஸ் அப் வெப் வெர்ஷனில் ‘சாட் லாக்’ அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கைபேசி செயலியில் கொண்டுவரப்பட்ட அம்சமாகும். அதன்படி, வாட்ஸ் அப் வெப்பில் உள்ள சைட் பாரில், லாக் அம்சம் இடம்பெறும். அதில் புதிதாக லாக் ஃபோல்டர் உருவாக்கப்பட்டு, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட சாட்களை சேமித்துக் கொள்ளலாம். இவ்வாறு லாக் செய்யப்பட்ட சாட்களை பார்ப்பதற்கு பாஸ் கீ கொடுக்க வேண்டும். தற்போதைய நிலையில், பீட்டா பரிசோதனை கட்டத்தில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.