வாட்ஸ் அப்பில் இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் விரைவில் அறிமுகம்

வாட்ஸ் அப் சமூக செயலியில், ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் விரைவில் வெளியாக உள்ளது.வாட்ஸ் அப் செயலியில், கணக்குகளை ஹேக் செய்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு மேம்படுத்தல்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக, ஹேக்கிங் செய்வதை தடுக்கும் நோக்கில், ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் வெளியாக உள்ளது. தற்போதைய நிலையில், இது பீட்டா பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

வாட்ஸ் அப் சமூக செயலியில், ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் விரைவில் வெளியாக உள்ளது.வாட்ஸ் அப் செயலியில், கணக்குகளை ஹேக் செய்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு மேம்படுத்தல்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக, ஹேக்கிங் செய்வதை தடுக்கும் நோக்கில், ஈமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் வெளியாக உள்ளது. தற்போதைய நிலையில், இது பீட்டா பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் படி, வாட்ஸ் அப் கணக்கில் உள்நுழைவு செய்வதற்கு, இமெயில் மூலம் வெரிஃபிகேஷன் செய்யப்படும். இதன் மூலம், கைப்பேசி தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ, இமெயில் மூலமாக வாட்ஸ் அப் இயக்கத்தை மேற்கொள்ள முடியும். அத்துடன், சிம் குளோனிங் மூலம் வாட்ஸ் அப் கணக்குகளை ஹேக் செய்வது தடுக்கப்படும். எனவே, வாட்ஸ் அப் கணக்குக்கான பாதுகாப்பு கூடுதலாக ஒரு படி அதிகரிக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu