வாட்ஸ் அப்பில் 'சேனல்' என்ற புதிய அம்சம் அறிமுகம்

வாட்ஸ்அப் நிறுவனம், பயனர் வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ‘சேனல்’ என்ற ஒளிபரப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், கருத்துக்கணிப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் மூலம், பயனர்கள் தகவல்களை ஒளிபரப்பு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில், கம்யூனிட்டி அம்சம் வெளியான சில மாதங்களில், சேனல் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வாட்ஸ் அப் குழுக்களாக இயங்கக்கூடிய பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட ஸ்தாபனங்களுக்கு […]

வாட்ஸ்அப் நிறுவனம், பயனர் வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ‘சேனல்’ என்ற ஒளிபரப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், கருத்துக்கணிப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் மூலம், பயனர்கள் தகவல்களை ஒளிபரப்பு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில், கம்யூனிட்டி அம்சம் வெளியான சில மாதங்களில், சேனல் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வாட்ஸ் அப் குழுக்களாக இயங்கக்கூடிய பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட ஸ்தாபனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில், புதிதாக ‘அப்டேட்ஸ்’ என்ற பகுதி இடம் பெற உள்ளது. அதன் கீழ், இந்த சேனல் இடம்பெறும் என கூறப்படுகிறது. பயனர் ஒருவர், தான் பின் தொடரும் சேனல்களின் ஸ்டேட்டஸ் களை இங்கு பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம், சேனல் வைத்திருக்கும் அட்மின் பயனரின் கைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சிங்கப்பூர் மற்றும் கொலம்பியா நாடுகளில் இந்த அம்சம் வெளியிடப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu