பயனர்கள் வசதியை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த வரிசையில், புதிதாக பேவரைட் காண்டாக்ட்ஸ் அம்சம் வெளியாக உள்ளது.
ஃபேவரைட் காண்டாக்ட்ஸ் அம்சத்தில் இணைக்கப்படும் நபர்களுக்கு, உடனடியாக கால் செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகமாக உள்ளது. மேலும், ‘கால்ஸ்’ பகுதியில், ஃபேவரைட் காண்டாக்ட்ஸ் நபர்களின் பெயர்கள் எப்போதும் முன்னிலையில் காண்பிக்கப்படும். இதனால், எந்தவித இடையூறும் இன்றி, எளிமையாகவும் விரைவாகவும் தங்களுக்கு வேண்டியவர்களை தொடர்பு கொள்ளும் அம்சம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பான விவரங்கள் WABetaInfo தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.