உலக அளவில் டீப் ஃபேக் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் உயர்ந்து வருகின்றன. எனவே, டீப் ஃபேக் விவகாரங்களுக்கு பிரத்தியேகமான ஹெல்ப் லைன் வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. வரும் மார்ச் மாதத்தில் இது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் வழியிலான ஹெல்ப்லைன் மூலம் டீப் ஃபேக் விவகாரங்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையோடு இது செயல்படும் என கூறப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹெல்ப் லைன் சேவைகள் வழங்கப்படுகின்றன. வாட்ஸ் அப் சாட் மூலம் டீப் ஃபேக் என சந்தேகிக்கப்படும் பைலை அனுப்பினால், அது சார்ந்த உண்மை தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக எம் சி ஏ உடன் கூட்டணியில் பணியாற்றுவதாக மெட்டா தெரிவித்துள்ளது.