குரூப் சாட்டில் ப்ரொபைல் போட்டோ - வாட்ஸ்அப் புதிய அறிமுகம்

February 22, 2023

கடந்த அக்டோபர் மாதத்தில், வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் சாட்டில் ப்ரொபைல் போட்டோ அம்சத்தை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், தற்போது, அந்த அம்சம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது பீட்டா பரிசோதனை கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ள நிறுவனம், முழு பணிகளும் நிறைவடைந்த பின்னர் பயனர்களுக்கு இந்த அம்சம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் குரூப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே பெயரைக் கொண்டிருப்பதால், பல்வேறு குழப்பங்கள் […]

கடந்த அக்டோபர் மாதத்தில், வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் சாட்டில் ப்ரொபைல் போட்டோ அம்சத்தை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், தற்போது, அந்த அம்சம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது பீட்டா பரிசோதனை கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ள நிறுவனம், முழு பணிகளும் நிறைவடைந்த பின்னர் பயனர்களுக்கு இந்த அம்சம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குரூப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே பெயரைக் கொண்டிருப்பதால், பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனைத் தவிர்க்க, குரூப் சாட்டில், செய்திகளுக்கு அருகில் பயனரின் ப்ரொபைல் போட்டோ இடம்பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu