வாட்ஸ்அப் செயலியில் தேதி வாரியாக குறுஞ்செய்திகளை தேடும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஐபோன்களில் மட்டுமே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் விரைவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், குறிப்பிட்ட ஒரு குறுஞ்செய்தியை தேடுவதற்கு, ஏதாவது ஒரு வார்த்தையை குறிப்பிட்டு தேட வேண்டும் (Keyword Search). தற்போது இதனுடன் சேர்த்து, தேதியை குறிப்பிட்டு தேடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், குறுஞ்செய்தியை அனுப்பிய தேதி நினைவில் இருந்தால், பயனர் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்களை மற்றொரு செயலியில் இருந்து வாட்ஸ் அப்பிற்கு இழுத்துக் கொண்டு சேர்க்கும் டிராக் அண்ட் ட்ராப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.