வாட்ஸ்அப் குழுவில் 1024 உறுப்பினர்கள் வரை இணைத்துக் கொள்ளலாம் - மேலும் பல புதிய அம்சங்கள் வெளியீடு

November 3, 2022

வாட்ஸ்அப் செயலியில், பல புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை கொடுக்கும் வகையில் இந்த அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் என்பது மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக தளமாகும். எனவே, மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்பட உள்ள புதிய அம்சங்கள் குறித்து பேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், வரும் மாதங்களில், சர்வதேச அளவில் இந்த அம்சங்கள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், பல்வேறு […]

வாட்ஸ்அப் செயலியில், பல புதிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை கொடுக்கும் வகையில் இந்த அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் என்பது மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக தளமாகும். எனவே, மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்பட உள்ள புதிய அம்சங்கள் குறித்து பேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், வரும் மாதங்களில், சர்வதேச அளவில் இந்த அம்சங்கள் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், பல்வேறு அமைப்புகள், வாட்ஸ்அப் செயலியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, குடியிருப்பு வளாகங்களில் உள்ள பராமரிப்பு செயல்பாடுகள், அலுவலக உறுப்பினர்களைக் கொண்ட சந்திப்பு குழு, குழந்தைகளின் பள்ளி தொடர்பான குழுக்கள் போன்றவை வாட்ஸ்அப் மூலம் இயங்குகின்றன. இவற்றின் செயல்பாடுகளை எளிமையாக்கும் விதமாக புதிதாக “கம்யூனிட்டி” (Community) என்ற அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம், ஒரே உறுப்பினர்களைக் கொண்டு, வெவ்வேறு வாட்ஸ்அப் குழுக்களாக செயல் படுவோருக்கு மிகுந்த பலன் கிடைக்க உள்ளது.

கம்யூனிட்டி என்ற அம்சத்தின் கீழ், பல்வேறு குழுக்களை ஒரே தலைப்பின் கீழ் இணைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரே குடையின் கீழ் பல்வேறு உப குழுக்களை இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம், தகவல் பரிமாற்றம் எளிதாக்கப்படுகிறது. அத்துடன், வாட்ஸ்அப்பில் கருத்துக்கணிப்புகளை நடத்தும் வசதி, வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்புகளில் 32 பேர் வரை இணைந்து கொள்வதற்கான மேம்படுத்துதல் வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் ஒரு வாட்ஸ்அப் குழுவில், மொத்தமாக இணைக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், பயனர்களின் தனி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அம்சங்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu