பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த வகையில், புதிதாக டெக்ஸ்ட் ஃபார்மேட் வசதிகள் அறிமுகமகி உள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது வாட்ஸ் அப் சேனலில் தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், கணினி மற்றும் மேக் என அனைத்து வகை வெர்ஷன்களிலும் டெக்ஸ்ட் ஃபார்மட் வசதிகள் கிடைக்கும்.
வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ள புதிய டெக்ஸ்ட் ஃபார்மட் வசதிகள்:
1. புல்லட் எனப்படும் வரிசைப்படுத்தும் வசதி ( ‘-’ க்கு அடுத்து வருபவை புல்லட்டிங் செய்யப்படும்)
2. நம்பரிங் எனப்படும் எண் வழியாக வரிசைப்படுத்தும் வசதி (எண்களைத் தொடர்ந்து புள்ளி வைத்தால் நம்பரிங் வசதி கிடைக்கும்)
3. சொற்களை ஹைலைட் செய்யும் வசதி ( ‘>’ க்கு பின்னால் வருபவை ஹைலைட் செய்யப்படும்)
4. இன்லைன் கோட்
5. போல்ட் ( * க்கு இடையில் கொடுக்கப்படும் எழுத்துக்கள் போல்ட் ஆக காண்பிக்கப்படும்)
6. இத்தாலிக் ( _ சிம்பலுக்கு இடையில் கொடுக்கப்படும் எழுத்துக்கள் இத்தாலிக் ஆக காண்பிக்கப்படும்)
7. ஸ்ட்ரைக் த்ரூ ( ~ சிம்பலுக்கு இடையில் கொடுக்கப்படும் எழுத்துக்கள் ஸ்ட்ரைக் செய்யப்படும்)
மோனோ ஸ்பேஸ்