வாட்ஸ் அப்பில், புதிதாக, வாய்ஸ் நோட் மூலம் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும் அம்சம் அறிமுகமாக உள்ளது.
தற்போதைய நிலையில், புகைப்படங்கள், வீடியோக்கள், எழுத்துப் பதிவுகள் போன்றவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைக்க முடியும். இதனுடன் சேர்த்து, புதிதாக, 30 வினாடிகளுக்கான வாய்ஸ் நோட்டை வைக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலையில், ஐஓஎஸ் கைப்பேசிகளில் இந்த அம்சம் பரிசோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு கைபேசிகளுக்கு, சற்று தாமதமாக இந்த அம்சம் அறிமுகமாகும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்த, ஸ்டேட்டஸ் அப்டேட்டில் எழுத்து பதிவு செய்ய கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெறும் ‘மைக்’ ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். வழக்கமாக வாய்ஸ் நோட் பதிவு செய்வது போல, ஸ்டேட்டஸ் அப்டேட்டில் பதிவு செய்து அனுப்பலாம். அதே வேளையில், வாய்ஸ் நோட்டுடன் கூடுதலாக எழுத்து பதிவையும் சேர்த்து அனுப்ப முடியும்.