வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளில் 32 பேர் வரை பங்கேற்க வகை செய்யும் புதிய அம்சம் வெளியிடப்பட உள்ளது. வாட்ஸ் அப் மேம்படுத்தல்கள் குறித்த விவரங்களை பகிரும் WABetaInfo, இது தொடர்பான தகவல்களை தனது வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 32 பேர் பங்கேற்கும் வீடியோ கால் அம்சம் பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், வாட்ஸ் அப் செயலியில் 32 பேர் சாதாரண ஆடியோ அழைப்புகளில் பங்கேற்க முடியும். அதே அம்சம், வீடியோ அழைப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. வாட்ஸ் அப் செயலியின் புதிய வெர்ஷனில் இந்த அம்சம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் விண்டோஸ் அப்டேட்டில் அடுத்த சில நாட்களில் இது வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.