வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல், பழைய மாடல் கைபேசிகள் மற்றும் பழைய இயங்கு தளங்களில் இயங்கும் கைபேசிகளில் வாட்ஸ் அப் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் சேவைகள் நிறுத்தப்படும் கைப்பேசிகளின் பட்டியலில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கைபேசி மாடல்களும் இடம்பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்சி ஏஸ்2, கேலக்சி கோர், கேலக்சி எஸ்2, கேலக்சி எஸ்3 மினி, கேலக்சி டிரெண்ட் 2, கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி எக்ஸ்கவர் 2, சோனி எக்ஸ்பீரியா சீரிஸ்களில் 3 மாடல், விகோ போனில் 2 மாடல்கள், ஆப்பிள் ஐபோன் 5, ஆப்பிள் ஐபோன் 5சி, ஆர்காஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE, கிராண்ட் எக்ஸ் குவாட், ஹெச்டிசி டிசையர், Huawei அசெண்ட் டி, அசெண்ட் டி1, அசெண்ட் டி2, அசெண்ட் ஜி740, அசெண்ட் மேட், அசெண்ட் பி1, குவாட் எக்ஸ்எல், லெனோவா ஏ820, எல்ஜி எனாக்ட், எல்ஜி லூசிட் 2, எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள், மெமொ ZTE உள்ளிட்ட கைபேசி மாடல்கள் இந்த பட்டியலில் அடக்கம்.














