கோதுமை விலை ஒரே நாளில் 9% குறைப்பு

January 28, 2023

இந்தியாவின் உணவு பாதுகாப்பு கழகம், கோதுமை விற்பனைக்கான டெண்டர்களை வழங்கி உள்ளது. எனவே, டெல்லியில், கோதுமை விலை ஒரே நாளில் 6 முதல் 9 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும், அடுத்த 10 நாட்களில் கோதுமை விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், 2023-24 ஆம் பருவ காலத்திற்கான கோதுமை உற்பத்தி குறைவாக உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு மில்லியன் டன் அளவில் கோதுமை இறக்குமதி […]

இந்தியாவின் உணவு பாதுகாப்பு கழகம், கோதுமை விற்பனைக்கான டெண்டர்களை வழங்கி உள்ளது. எனவே, டெல்லியில், கோதுமை விலை ஒரே நாளில் 6 முதல் 9 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும், அடுத்த 10 நாட்களில் கோதுமை விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், 2023-24 ஆம் பருவ காலத்திற்கான கோதுமை உற்பத்தி குறைவாக உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு மில்லியன் டன் அளவில் கோதுமை இறக்குமதி செய்ய நேரிடும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், கோதுமை விற்பனைக்கான டெண்டர் நிறைவடைந்ததும், கோதுமை மில்களை வந்தடையும். அதன் பின்னர், கோதுமை விலையில் மேலும் சரிவு உணரப்படும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu