அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சனியன்று இரவு பத்தரை மணி அளவில் வெள்ளை மாளிகை நோக்கி அதி வேகமாக கார் ஒன்று வந்தது. அது மாளிகையின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. இதில் வெள்ளை மாளிகைக்கு எந்த அச்சுரத்திலும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. கார் மோதி விபத்து ஏற்பட்ட பின் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். அப்போது அவர்கள் ஓட்டுநரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலம்பியா மாவட்டத்தின் காவல்துறை, ரகசிய சேவை மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, கடந்த ஜனவரி மாதத்தில் இதே போன்று தடுப்பு சுவரில் கார் மோதிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.














