கிராமப்புறங்களில் ஒயிட் லேபிள் ஏடிஎம்கள் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி

இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில், ஒயிட் லேபிள் ஏடிஎம்களை திறக்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒயிட் லேபிள் ஏடிஎம்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இந்த ஏடிஎம்களை அமைத்து இயக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் 4 அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்த ஏடிஎம்களை அமைக்க உள்ளன. இந்த […]

இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில், ஒயிட் லேபிள் ஏடிஎம்களை திறக்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

கிராமப்புறங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒயிட் லேபிள் ஏடிஎம்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், இந்த ஏடிஎம்களை அமைத்து இயக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் 4 அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்த ஏடிஎம்களை அமைக்க உள்ளன. இந்த ஒயிட் லேபிள் ஏடிஎம்கள் மூலம், பணம் எடுத்தல் தவிர, ரொக்க பணம் செலுத்துதல், கணக்கு குறித்த தகவல் அறிதல், மினி ஸ்டேட்மென்ட், கடவு எண் மாற்றம், காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிசான் ராவ் கரத் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் மூன்றாம் முதல் ஆறாம் தட்டு கிராமப்புற பகுதிகளில் ஒயிட் லேபிள் ஏடிஎம்கள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu