காசாவில் 25 மருத்துவமனைகள் முடக்கம் - ஐ.நா. கவலை

December 13, 2023

காசாவில் சுமார் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேல் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எஞ்சிய மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுகின்றன. இதுகுறித்து ஐநா கூறி இருப்பதாவது, காசாவில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவான மருத்துவமனைகள் ஓரளவுக்கு இயங்கி வருகின்றன. காசாவின் சுகாதார கட்டமைப்பு குறைந்து விட்டது. 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் உள்ளன. வடக்கு காசாவில் ஒன்று தெற்கு […]

காசாவில் சுமார் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேல் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. எஞ்சிய மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுகின்றன. இதுகுறித்து ஐநா கூறி இருப்பதாவது, காசாவில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவான மருத்துவமனைகள் ஓரளவுக்கு இயங்கி வருகின்றன. காசாவின் சுகாதார கட்டமைப்பு குறைந்து விட்டது. 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் உள்ளன. வடக்கு காசாவில் ஒன்று தெற்கு காசாவில் 10 என மொத்தம் 11 மருத்துவமனைகள் சுமாராக இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலை நீடித்தால் தாங்க முடியாத துயரம் ஏற்படும். அத்தகைய கொடுமையான நிலை ஏற்படக்கூடாது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu