புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 8 மில்லியன் மரணங்கள் நேர்கின்றன - உலகச் சுகாதார மையம்

March 23, 2023

புகைப்பழக்கம் காரணமாக, உலகளாவிய முறையில், ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் பேர் உயிரிழப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், புகை பிடிப்பவர்களின் அருகில் உள்ளவர்கள், புகையிலை எரிப்பதால் வெளிவரும் நச்சுக்காற்றை சுவாசிப்பவர்கள் ஆகியோரின் மரணங்கள் எண்ணிக்கை 1.2 மில்லியன் அளவில் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களுக்கு சவால்கள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், உலக அளவில் புகையிலை பொருட்களை உட்கொள்ளும் மக்களைக் கொண்ட நாடுகளின் […]

புகைப்பழக்கம் காரணமாக, உலகளாவிய முறையில், ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் பேர் உயிரிழப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும், புகை பிடிப்பவர்களின் அருகில் உள்ளவர்கள், புகையிலை எரிப்பதால் வெளிவரும் நச்சுக்காற்றை சுவாசிப்பவர்கள் ஆகியோரின் மரணங்கள் எண்ணிக்கை 1.2 மில்லியன் அளவில் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

உலக அளவில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களுக்கு சவால்கள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், உலக அளவில் புகையிலை பொருட்களை உட்கொள்ளும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு புகைப்பழக்கம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30% குறைப்பதற்கான இலக்கை நோக்கி பயணிக்க, 30% உலக நாடுகள் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu