போதிய உடல் அசைவு இல்லாத இந்தியர்கள் அதிகரிப்பு - உலக சுகாதார மையம் எச்சரிக்கை

அதிக அளவிலான இந்தியர்களிடம், உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள அளவுக்கு குறைவான உடல் அசைவு உள்ளதாக, லான்செட் அறிக்கை கூறுகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. உடல் அசைவு குறைந்துள்ள காரணத்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 197 நாடுகளில், கடந்த 2000 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, […]

அதிக அளவிலான இந்தியர்களிடம், உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள அளவுக்கு குறைவான உடல் அசைவு உள்ளதாக, லான்செட் அறிக்கை கூறுகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை இதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது. உடல் அசைவு குறைந்துள்ள காரணத்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 197 நாடுகளில், கடந்த 2000 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, 45.4% இந்தியர்கள் போதிய உடல் அசைவு இல்லாமல் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதுவே, 2000 ஆம் ஆண்டில் 22.4% இந்தியர்கள் மட்டுமே போதிய உடல் அசைவின்றி இருந்துள்ளனர். இந்த போக்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள் 55% இந்தியர்கள் போதிய உடல் அசைவில்லாமல் இருப்பார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரைப்படி ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் மிதமான அல்லது 75 நிமிடங்கள் வேகமான உடல் அசைவு செய்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu