ஆம் ஆத்மி கட்சியின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி, துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து இணை காவல் ஆணையாளர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறியபோது, கோகி துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்தார். அவரை டி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் ஆணையாளர் குல்தீப் சஹால் மற்றும் காவல் துணை ஆணையாளர் ஜிதேந்திரா ஜோர்வால் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். கோகி, மனைவி, மகன் மற்றும் மகள் கொண்ட குடும்பத்தினரைச் சேர்ந்தவர். இரண்டு முறை கவுன்சிலராக இருந்த கோகி, 2022-ல் எம்.எல்.ஏ. ஆனார்.