கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மூன்று மாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஜனவரி மாதத்தில், உணவு பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளில் கடும் சரிவு பதிவாகி இருந்தது. அதன்படி, இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 0.27% அளவில் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், மொத்த விலை பணவீக்கம் மைனஸ் விகிதத்தில் பதிவாகி வந்தது. அதன் பிறகு, நவம்பரில் 0.39% ஆக உயர்ந்தது. அதன் பின்னர், டிசம்பரில் 0.73% ஆக உயர்ந்து, ஜனவரியில் மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உணவுத்துறையில், காய்கறிகள் தொடர்பான பணவீக்கம் 26.3% அளவில் இருந்து 19.71% அளவுக்கு குறைந்துள்ளது. இது தவிர, பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றின் விலைகளும் ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளன.