கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 1.32% ஆக பதிவாகி உள்ளது. எனவே, தொடர்ந்து 4 மாதங்களாக, மைனஸ் விகிதத்தில் மொத்த விலை பணவீக்கம் பதிவாகி வருகிறது. அதன்படி, எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. ஆனால், அதே வேளையில், உணவுப் பொருட்கள் விலை கடுமையான உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், இந்தியாவில் உணவுப் பொருள் பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. ஜூன் மாதத்தில், 1.22% ஆக பதிவாகி இருந்த உணவுப்பொருள் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 14.25% ஆக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 3வது முறையாக 6.5% ஆக, மாற்றம் இன்றி தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. துறைவாரியாக, எரிபொருள் மற்றும் எரிசக்தி துறை பணவீக்கம் மைனஸ் 12.63% லிருந்து மைனஸ் 12.79% ஆக சரிந்துள்ளது. உற்பத்தி துறை பணவீக்கம் மைனஸ் 2.71% லிருந்து மைனஸ் 2.51% ஆக குறைந்துள்ளது.