இந்தியாவின் பணவீக்கம் 8.39% ஆக குறைந்தது - மார்ச் 2021 பிறகான குறைந்த பதிவு

November 14, 2022

அரசாங்க தரவுகளின் படி, இந்தியாவின் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 8.39% ஆக சரிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இது 10.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து பொருட்களின் விலையிலும் சரிவுகள் காணப்பட்டதால் பணவீக்கம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 2021 முதல் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகி வருகிறது. உச்சபட்சமாக 2022 மே மாதத்தில் 15.88 சதவீதமாக பதிவானது. இந்நிலையில், மூலப் பொருட்களின் விலை சரிவு பணவீக்கத்தை குறைத்துள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, இந்தியாவின் […]

அரசாங்க தரவுகளின் படி, இந்தியாவின் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 8.39% ஆக சரிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இது 10.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து பொருட்களின் விலையிலும் சரிவுகள் காணப்பட்டதால் பணவீக்கம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 2021 முதல் பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் பதிவாகி வருகிறது. உச்சபட்சமாக 2022 மே மாதத்தில் 15.88 சதவீதமாக பதிவானது. இந்நிலையில், மூலப் பொருட்களின் விலை சரிவு பணவீக்கத்தை குறைத்துள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்த அக்டோபர் மாதத்தில், கடந்த 18 மாதங்களில் குறைவான அளவு பணவீக்கம் பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், உணவு பணவீக்கம்,11.03 சதவீதத்தில் இருந்து 8.33% ஆக பதிவாகியுள்ளது. மேலும், காய்கறிகள் குறித்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு கையில் பாதியளவுக்கும் கீழ் குறைந்துள்ளது. எனினும், மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள 6% விளிம்பு நிலைக்கு மேலாகவே பணவீக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu