அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர் (ரூ.1.82 லட்சம் கோடி) வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவிடம் அதிகளவில் பணம் உள்ளது என்றும், உலகில் மிக அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியை மதிக்கிறேன் என்றாலும், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நிதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை குறைப்பது முக்கிய நடவடிக்கையாக தொடங்கப்பட்டது. அதன்படி, இந்தியாவுக்கு வழங்கப்பட இருந்த 21 மில்லியன் டாலர் உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு செலவினங்களைக் கட்டுப்படுத்த இது எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவாக கூறப்படுகிறது.