தெற்கு ஆஸ்திரேலியாவில் 533 கோடியில் ஹைட்ரஜன் மையம் அமைக்கப்பட உள்ளது.
உலக நாடுகள் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறி வருகின்றனர். இதற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளை காரணம். அந்த வகையில், தெற்கு ஆஸ்திரேலியாவின் வையல்லா பகுதியில் ஹைட்ரஜன் மையம் அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 533 கோடி ஒதுக்குவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2030க்குள் ஆண்டுதோறும் 18 லட்சம் டன் ஹைட்ரஜன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவை வல்லரசாக மாற்ற இந்த திட்டம் உதவும். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இயலும் என்று குறிப்பிட்டுள்ளது.