உலக அளவில் சிறந்த என்சைக்ளோபீடியா தளமாக விக்கிபீடியா அறியப்படுகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது, அதிகம் பேர் பார்க்கும் வலைதளமாக விளங்கி வருகிறது. தற்போதைய நிலையில், சுமார் 6 மில்லியன் ஆங்கில கட்டுரைகள் இந்த தளத்தில் உள்ளன. இந்நிலையில்,10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தளத்தில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இணையவாசிகளின் வசதிகளுக்கு ஏற்ப புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளதாக விக்கிமீடியா பவுண்டேஷன் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஒரு கட்டுரையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு சுலபமாக நேவிகேட் செய்யும் வகையில் டேபிள் ஆப் கன்டென்ட் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், ஒரே கட்டுரையை பல்வேறு மொழிகளில் வாசிக்க ஏதுவாக, புதிய லாங்குவேஜ் ஸ்விச் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுரையை படிக்கும் பொழுது அதிகமாக ஸ்க்ரோல் செய்வதை தடுக்கவும் புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.