கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ - 12000 ஏக்கர் நாசம்

June 18, 2024

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தீக்கிரையானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில் உள்ள கோர்மன் என்ற இடத்தில் சனிக்கிழமை அன்று காட்டுத்தீ ஏற்பட்டது. இது அருகில் உள்ள பல பகுதிகளிலும் பரவியது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் நாசமாகின. கோர்மன் பகுதிக்கு உட்பட்ட ஹங்ரி வேலி பகுதியில் இருந்து சுமார் 1200 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இந்த காட்டுத்தீ பிரமிட் […]

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தீக்கிரையானது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில் உள்ள கோர்மன் என்ற இடத்தில் சனிக்கிழமை அன்று காட்டுத்தீ ஏற்பட்டது. இது அருகில் உள்ள பல பகுதிகளிலும் பரவியது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் நாசமாகின. கோர்மன் பகுதிக்கு உட்பட்ட ஹங்ரி வேலி பகுதியில் இருந்து சுமார் 1200 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இந்த காட்டுத்தீ பிரமிட் லேக் பகுதியை நோக்கி நகர்ந்து செல்கிறது. இந்த தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிறு அன்று மாலை வரை இரண்டு சதவீத அளவுக்கு காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் எவரேனும் பலியானதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காற்று பலமாக வீசுவதால் இந்த தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விமானத்திலிருந்து தீயை அணைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ இதுவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu