எரிபொருளுக்கான விண்டுபால் வரி உயர்வு - விமான எரிபொருளுக்கான ஏற்றுமதிவரி ரத்து

March 6, 2023

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கான விண்டுபால் வரியை இந்திய அரசு உயர்த்தி உள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 4400 ரூபாய் விண்டுபால் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், டீசலுக்கான ஏற்றுமதிவரி லிட்டருக்கு 0.5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான ஏற்றுமதி வரியில் மாற்றங்கள் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி முதல், இந்த புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, […]

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கான விண்டுபால் வரியை இந்திய அரசு உயர்த்தி உள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 4400 ரூபாய் விண்டுபால் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், டீசலுக்கான ஏற்றுமதிவரி லிட்டருக்கு 0.5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான ஏற்றுமதி வரியில் மாற்றங்கள் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி முதல், இந்த புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான விண்டுபால் வரியை இந்தியா நிர்ணயித்து வருகிறது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளுக்கு ஏற்ப, விண்டுபால் வரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த புதிய வரிகள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. விண்டுபால் வரி மூலம் இந்திய அரசுக்கு கணிசமான அளவு வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu