மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான வின்டுபால் வரியை நேற்று முதல் உயர்த்தியுள்ளது.
முன்னதாக, கச்சா எண்ணெய் நீதான வின்டுபால் வரி 1600 ரூபாய் ஆக இருந்தது. தற்போது, அது 4250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில், டீசல் மீதான வின்டுபால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டீசலுக்கு வின்டுபால் வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், விமான எரிபொருளுக்கான வின்டுபால் வரியில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு வின்டுபால் வரியை விதித்து வருகிறது. அந்த வகையில், பூஜ்ஜியத்தில் இருந்து 1600 ஆக உயர்த்தப்பட்ட வின்டுபால் வரி, தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.