விப்ரோ நிறுவனம், கடந்த ஆண்டு, விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் என்ற பிரிவில், பாக்கெட் உணவுகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில், மசாலா பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த நிராபரா நிறுவனத்தை கையகப்படுத்தியது. தற்போது, மற்றொரு கேரள நிறுவனமான பிராமின்ஸ் மசாலா நிறுவனத்தை விப்ரோ வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், விப்ரோ நிறுவனம், உணவுப் பொருள் பிரிவில் தனது சந்தையை விரிவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் நிறுவனத்தின் வருவாய் 10000 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1987 ஆம் ஆண்டு, பிராமின்ஸ் மசாலா நிறுவனம் தொடங்கப்பட்டது. மசாலா பொருட்கள், உடனடி உணவுகள், ஊறுகாய் மற்றும் கோதுமை போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தை விப்ரோ கையகப்படுத்துகிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.