விப்ரோவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுபா தத்தாவார்த்தி ஆகஸ்ட் 16 முதல் பதவி விலகுகிறார். கடந்த ஏப்ரல் மாதம், தியரி டெலபோர்ட்டுக்கு பதிலாக சிரினி பல்லியா விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றதில் இருந்து நடைபெறும் நான்காவது உயர்மட்ட வெளியேற்றம் இதுவாகும். இதற்கு முன்னர் சிஓஓ அமித் சௌத்ரி, ஏபிஎம்இஏ சிஇஓ அனீஸ் சென்சா, தலைமை டெலிவரி அதிகாரி அஜித் மஹாலே ஆகியோர் பதவி விலகினர். அவர்கள் அனைவரும் டெலபோர்ட்டின் கீழ் தலைமை பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ நிறுவனத்தை நிலைப்படுத்தும் வகையில், உள்நாட்டு திறமைகளை மேம்படுத்தி வரும் பல்லியாவின் இந்த அணுகுமுறை, அதிக சம்பளத்தில் வெளிநாட்டு நிர்வாகிகளை நியமித்த டெலபோர்ட்டின் அணுகுமுறையுடன் முரண்படுகிறது. இது, நிறுவனத்திற்குள் பிளவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, பல்லியாவின் தலைமையில், விப்ரோ அதிக மாற்றங்களைச் சந்திக்கும் என கருதப்படுகிறது.