அதிக சம்பளம் வாங்கும் பணியாளர்கள், மிகவும் திறமையாக வேலை செய்த போதும், அவர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாது என விப்ரோ நிறுவனம் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வரும் டிசம்பர் மாதத்தில், விப்ரோ நிறுவன பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், விப்ரோ நிறுவனம் இந்த அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம், பல்வேறு வர்த்தக சவால்கள் மற்றும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனை சமாளிக்கும் விதமாக, இந்த முறை வழங்கப்படும் சம்பள உயர்வு நடவடிக்கையில், அதிக சம்பளம் வாங்கும் பணியாளர்கள் விலக்கப்பட்டுள்ளனர். இந்த முறை, குறைவாக சம்பளம் வாங்கும் திறமையான பணியாளர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி, பணியாளர்களுக்கு புதிய சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என விப்ரோ தெரிவித்துள்ளது.