விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு 47% குறைந்தது

October 13, 2022

விப்ரோ நிறுவனம், நேற்று இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருந்தது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெல்போர்ட் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, நிறுவனத்தின் லாபம், வருடாந்திர அடிப்படையில், 9% குறைந்துள்ளது. அத்துடன், அடுத்த காலாண்டிலும் 2% வளர்ச்சி மட்டுமே பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நிறுவனத்திற்கு தொடர் பின்னடைவாகும். இந்நிலையில், நிறுவனத்தின் இந்த சரிவு நிலை, இன்றைய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை இன்று ஒரே நாளில் ஏழு சதவீதத்திற்கும் […]

விப்ரோ நிறுவனம், நேற்று இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருந்தது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெல்போர்ட் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி, நிறுவனத்தின் லாபம், வருடாந்திர அடிப்படையில், 9% குறைந்துள்ளது. அத்துடன், அடுத்த காலாண்டிலும் 2% வளர்ச்சி மட்டுமே பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நிறுவனத்திற்கு தொடர் பின்னடைவாகும். இந்நிலையில், நிறுவனத்தின் இந்த சரிவு நிலை, இன்றைய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை இன்று ஒரே நாளில் ஏழு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 14.6% உயர்ந்து, 22,539 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் லாபம் 2659 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் 2930 கோடியாக பதிவாகி இருந்தது. எனவே, நிறுவனத்தின் லாபத்தில் 9.27% சரிவு காணப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்களுக்கான செலவுகள் அதிகரித்தது மற்றும் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளில் இருந்து வருவாய் குறைந்தது ஆகிய காரணங்கள் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன.

நேற்றைய வர்த்தக நாளின் முடிவில் விப்ரோ நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 408.5 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று மதியம் 1:20 மணி அளவில், நிறுவனத்தின் பங்கு விலை 379.5 ஆக சரிந்துள்ளது. சாப்ட்வேர் சேவைகள், நெட்வொர்க்கிங், சர்வர்கள், ஸ்டோரேஜ் சாதனங்கள், சாப்ட்வேர் லைசென்ஸ்கள் போன்ற பல சேவைகளை வழங்கும் விப்ரோ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 2.1 லட்சம் கோடியாகும். இந்நிலையில், விப்ரோ நிறுவனம் தொடர்ந்து 52 வாரங்களாக சரிவில் உள்ளது. எனவே, இந்த ஆண்டில் மட்டுமே, நிறுவனத்தின் பங்கு மதிப்பு 47% சரிந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu