விப்ரோ காலாண்டு லாபம் 2.8% உயர்வு - வருவாய் 14.4% உயர்வு

January 14, 2023

விப்ரோ நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் லாபம் 2.8% உயர்ந்துள்ளது. மேலும், அடுத்த காலாண்டில் 0.6 -1% வளர்ச்சியை எதிர்நோக்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், நடப்பு நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 11.5 முதல் 12% வரை இருக்கும் என விப்ரோ கணித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் அறிக்கையில், கடந்த காலாண்டில், 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர […]

விப்ரோ நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் லாபம் 2.8% உயர்ந்துள்ளது. மேலும், அடுத்த காலாண்டில் 0.6 -1% வளர்ச்சியை எதிர்நோக்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், நடப்பு நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி 11.5 முதல் 12% வரை இருக்கும் என விப்ரோ கணித்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் அறிக்கையில், கடந்த காலாண்டில், 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 26% உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 3053 கோடியாகவும், நிகர வருவாய் 23229 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெல்போர்ட், “உலகளாவிய முறையில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்நுட்ப துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu