விப்ரோ நிறுவனத்தின் பை பேக் அறிவிப்பு எதிரொலி - பங்கு மதிப்பு 3% உயர்வு

April 24, 2023

கடந்த சில வாரங்களாகவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, தனது பங்குகளை பை பேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 3% உயர்வை பதிவு செய்துள்ளது. பை பேக் செய்யும் போது, சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலை கொடுத்தே பங்குகள் வாங்கப்படும். இதனால், பங்குதாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே, […]

கடந்த சில வாரங்களாகவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, தனது பங்குகளை பை பேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 3% உயர்வை பதிவு செய்துள்ளது.

பை பேக் செய்யும் போது, சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலை கொடுத்தே பங்குகள் வாங்கப்படும். இதனால், பங்குதாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே, விப்ரோ நிறுவனத்தின் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி, விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிவர உள்ளது. அதனுடன் சேர்த்து, பை பேக் குறித்த விவரங்களும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில், விப்ரோ நிறுவனம் 6% சரிவடைந்துள்ளது. எனவே, விப்ரோ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடுவோருக்கு பை பேக் நடவடிக்கை நல்ல வாய்ப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 2016, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில், விப்ரோ நிறுவனத்தின் பை பேக் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu