நேர்காணல் முறை தவிர்க்கப்படுவதால் அமெரிக்க விசாவுக்கான காத்திருப்பு நேரம் குறைகிறது

November 11, 2022

அமெரிக்க விசாவுக்கான நேர்காணல் நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், விசாகவுக்காக காத்திருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது. நான்கு வருடங்களுக்குள் காலாவதியான வணிக விசா B1 அல்லது சுற்றுலா விசா B2 வைத்திருக்கும் இந்தியர்களுக்கு, இந்த நேர்காணல் முறை தவிர்க்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், “மாணவர் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் நேர்காணல் முறையில் இருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுக்கான விசா காலம் காலாவதி ஆகும் தேதி குறித்த எந்த கட்டுப்பாடும் இல்லை” என தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா விசா […]

அமெரிக்க விசாவுக்கான நேர்காணல் நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், விசாகவுக்காக காத்திருக்கும் நேரம் குறைக்கப்படுகிறது.

நான்கு வருடங்களுக்குள் காலாவதியான வணிக விசா B1 அல்லது சுற்றுலா விசா B2 வைத்திருக்கும் இந்தியர்களுக்கு, இந்த நேர்காணல் முறை தவிர்க்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், “மாணவர் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் நேர்காணல் முறையில் இருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுக்கான விசா காலம் காலாவதி ஆகும் தேதி குறித்த எந்த கட்டுப்பாடும் இல்லை” என தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா விசா வைத்திருக்கும் இந்தியர்கள் எளிதாக மாணவர் விசா பெற முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பட்டியலில், மெக்சிகோ முதல் இடத்தையும், சீனா இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தன. இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தது. ஆனால், சீனா, தீவிரமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், தற்போது இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து அதிகமான விசாக்களை பெரும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu