மூன்றில் இரண்டு பங்கு ரூ.2,000 நோட்டுகள் திரும்பபெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம் தேதி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், மார்ச் 31 கணக்கீட்டின்படி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
இந்நிலையில், கரன்சிகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் மூன்றில் இரண்டு பங்கு 2,000 நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக புழக்கத்தில் இருந்த 2,000 நோட்டுகளில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவந்து விட்டன. இதில் 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள தொகை ஏனைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.