கடலூரில் அருகே உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் - புதுச்சேரி சாலையில் பெரிய காட்டுப்பாளையம் அருகே மதலப்பட்டு ஊராட்சி சிவனார்புரத்தில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலைக்கு உள்ளேயே பட்டாசு குடோனும் உள்ளது. இந்நிலையில் மாசிமக திருவிழாவுக்காக பல்வேறு கோயில்களில் இருந்து பட்டாசு ஆர்டர் வந்துள்ளது.
குடோன் முழுவதும் பட்டாசு இருந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4.15 மணிக்கு திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதில் மல்லிகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பிருந்தா, அம்பிகா, லட்சுமி, செவ்வந்தி, சுமதி ஆகிய 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், மேகலா, சக்தி, கோசலை ஆகிய 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.